திமுக ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி பேசினார்.;
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;
"நீட் தேர்வு ரத்து என்ற பொய்யான வாக்குறுதியை திமுக அளித்தது. நீட் தேர்வை ரத்துசெய்ய முடியாது என்ற ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் அறிவித்துவிட்டார். திமுக ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அரசு மருத்துவமனையில் மக்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவில்லை. திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.
சட்டவிரோத செயல்களை செய்வதே திமுகவினர்தான். இந்தியாவில் ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஆட்சி என்றால் அது திமுக ஆட்சிதான். குடிநீர், சொத்துவரி, மின் கட்டணம் , குப்பை வரி ஆகியவற்றை திமுக அரசு உயர்த்தியது. என்னுடைய பஸ் பயணத்தில் மூலம் ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது.”
இவ்வாறு அவர் பேசினார்.