தஞ்சை அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
புகை வெளியானதையடுத்து டிரைவர் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு இறங்கினார்.;
தஞ்சை,
தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா வரகூர் புது தெருவை சேர்ந்தவர் திருமுருகன். இவர் நேற்று காலை ஒரு காரில் வரகூரிலிருந்து அரியூர் வழியாக தனது சித்தப்பா சுப்பிரமணியனை ஏற்றிக்கொண்டு லால்குடி கோவிலுக்கு வந்தார்.
பின்னர் கோவிலில் சுப்பிரமணியனை இறக்கிவிட்டு மீண்டும் வரகூருக்கு சென்று கொண்டிருந்தார். அரியூர் அருகே சென்றபோது, திடீரென்று காரில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருமுருகன் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு இறங்கினார். இதைத்தொடர்ந்து கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இது குறித்து திருமுருகன் லால்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் பிரபு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.