திடீரென தீப்பற்றிய கார்... நொடிப்பொழுதில் தப்பிய ஐயப்ப பக்தர்கள்
இந்த விபத்தால் காரில் இருந்த ஐயப்ப பக்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.;
தேனி,
கர்நாடகா மாநிலம் ராமசமுத்திரத்தை சேர்ந்தவர் கோபால் நாயக். இவர் தனது நண்பர்களுடன் காரில் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு சென்றார். அவர்கள் வீடு திரும்பியபோது தேனி அருகே கார் சென்றுகொண்டிருக்கும் போதே தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதைக்கண்ட அவர்கள் பதறியடித்துக்கொண்டு காரை விட்டு கீழ் இறங்கி தப்பி ஓடினர்.
இறங்கிய நொடிப்பொழுதில் கார் குபுகுபுவென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. பின்னர் இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தால் காரில் இருந்த ஐயப்ப பக்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.