நீர்நிலையில் காவல் நிலையம் அமைப்பதை எதிர்த்து வழக்கு - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.;

Update:2025-09-04 22:04 IST

சென்னை,

சென்னை சோலிங்கநல்லூர் அருகே உள்ள செம்மஞ்சேரியில் நீர்நிலையில் காவல் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பில் 2019-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது 61 ஹெக்டேர் பரப்பளவு உள்ள நிலம் மேய்க்கால் தாங்கல் சாலையாக 1987 வரை இருந்ததாகவும், அதன் பிறகு மேய்க்கால் சாலையாக வகை மாற்றம் செய்யப்பட்டது என்றும், எந்த அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் ஆவணங்கள் அடிப்படையில் அந்த நிலம் நீர்நிலை என்பதால் செம்மஞ்சேரி காவல் நிலையத்தை அதே பகுதியில் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வது தொடர்பாக 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்