ரெயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் - போலீசார் விசாரணை

ஆவாரம்பாளையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-08-25 11:29 IST

கோப்புப்படம்

கோவை ,

திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆவாரம்பாளையத்தை கடந்த போது தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் கற்கள் வைக்கப்பட்ட‌து தெரியவந்தது. இதில் ரெயில் சக்கரம் ஏறியதில் சிமெண்ட் கற்கள் உடைந்து சிதறியது. இந்த சிமெண்ட் கற்களால் அதிர்ஷ்டவசமாத ரெயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதனையடுத்து தகவலறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ரெயில் தண்டவாளத்தில் கற்கள் வைத்தது யார் என்றும் இது ரெயிலை கவிழ்க்க முயற்சியா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்