ஓடும் ரெயிலில் படியில் அமர்ந்து சென்ற பயணியிடம் செல்போன் பறிப்பு - ஒருவர் கைது
படியில் அமர்ந்து பயணம் செய்தபோது பிரகாஷ் தனது செல்போனை பயன்படுத்திக் கொண்டிருந்தார்.;
சென்னை,
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த பிரகாஷ் ஜீவன் சிங் என்பவர் தன்பாத் விரைவு ரெயிலில் சென்னை நோக்கி பயணித்து கொண்டிருந்தார். அந்த ரெயில் வியாசர்பாடி-பேசின் பிரிட்ஜ் நிலையங்களுக்கு இடையே சென்றபோது பிரகாஷ் படியில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.
அப்போது அவர் தனது கையில் செல்போனை வைத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், பிரகாஷிடம் இருந்த செல்போனை மர்ம நபர் ஒருவர் தட்டி பறித்து சென்றுள்ளார். இது குறித்து பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், பெரம்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி, வியாசர்பாடியை சேர்ந்த சிவா என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.