சென்னை: உல்லாசத்துக்கு அழகிகள் கேட்டு தரகரை கடத்திய என்ஜினீயரிங் மாணவர்கள்

4 விபசார அழகிகளை அனுப்புமாறு முன்பதிவு செய்தனர்.;

Update:2025-07-10 02:17 IST

சென்னையில் செயல்படும் பிரபல என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் தினேஷ்குமார், அப்சர் அலி, வசந்தகுமார் ஆகிய 3 மாணவர்கள் கடந்த சனிக்கிழமை புதுச்சேரிக்கு உல்லாச சுற்றுலா சென்றுள்ளனர். உல்லாச சுற்றுலாவை அழகிகளுடன் கொண்டாட அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக 'ஆன்லைன்' மூலம் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் அனுப்பி 4 விபசார அழகிகளை அனுப்புமாறு முன்பதிவு செய்தனர்.

ஆனால் 'ஆன்லைன்' மூலம் பணத்தை பெற்றுக் கொண்ட விபசார தரகர் அழகிகளை அனுப்பி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அழகிகள் வேண்டும் அல்லது பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் 3 பேரும் கோபத்துடன் வந்து எழும்பூரில் வசிக்கும் விபசார தரகரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது நடந்த மோதலில் மாணவர்கள் 3 பேரும் தரகரை அடித்து உதைத்து காரில் கடத்தி சென்றுவிட்டதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக எழும்பூர் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடத்தியதாக புகார் கூறப்பட்ட தரகர் மீட்கப்பட்டார். மாணவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்