சென்னை: விமானம் மீது பட்ட லேசர் ஒளியால் பரபரப்பு

விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;

Update:2025-06-06 17:26 IST

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் விமானம் மீது பட்ட லேசர் ஒளியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 304 பயணிகளுடன், விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லேசர் அடிக்கப்பட்டபோது விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு லேசர் அடித்த நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்