சென்னை: தனியார் உணவு தயாரிக்கும் கூடத்தில் பயங்கர தீ விபத்து
சமையல் எரிவாய் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.;
பட்டாபிராம் அருகே தனியார் உணவு தயாரிக்கும் கூடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
மளமளவென பரவிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.