சென்னை: சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற துணை நடிகை - அதிர்ச்சி சம்பவம்
கைது செய்யப்பட்ட துணை நடிகை உள்பட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.;
சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் விடுதியில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு கே.கே.நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியை மீட்ட போலீசார், அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற கே.கே.நகரை சேர்ந்த அஞ்சலி, ஆந்திராவை சேர்ந்த சினிமா துணை நடிகை நாகம்மா, நாகராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டதால் அவரது தாயும் வேறு ஒருவரை திருமணம் செய்து சென்றுவிட்டார். இதனால், சிறுமி கே.கே.நகரில் உள்ள தனது தாயின் தோழியான அஞ்சலியின் பராமரிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அஞ்சலி, சினிமா துணை நடிகை நாகம்மாவுடன் சேர்ந்து ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட துணை நடிகை நாகம்மா உள்பட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.