கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்: நாகர்கோவில் - கோவா இடையே சிறப்பு ரெயில்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, நாகர்கோவில் - கோவா மாநிலம் மட்கான் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.;

Update:2025-12-03 12:57 IST

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, நாகர்கோவில் - கோவா மாநிலம் மட்கான் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 23, 30 மற்றும் ஜனவரி 6-ந் தேதிகளில் பகல் 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06083) மறுநாள் காலை 8.50 மணிக்கு மட்கானை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், மட்கான் ஜங்ஷனில் இருந்து டிசம்பர் 24, 31 மற்றும் ஜனவரி 7-ந் தேதிகளில் பகல் 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06084) மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்