கிறிஸ்துமஸ் பண்டிகை: மைசூரு-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மைசூரு-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.;
சென்னை,
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க மைசூரு-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. மைசூரு-தூத்துக்குடி சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06283) வருகிற 23 மற்றும் 27-ந்தேதிகளில் மைசூருவில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
மறுமார்க்கமாக தூத்துக்குடி-மைசூரு சிறப்பு ரெயில் வருகிற 24 மற்றும் 28-ந்தேதிகளில் மதியம் 2 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு மைசூருவை வந்தடைகிறது. இந்த ரெயில்கள் இரு மார்க்கமாகவும், மண்டியா, பெங்களூரு, ஓசூர், சேலம், மதுரை, கோவில்பட்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.