தமிழில் பெயர்ப்பலகை இல்லாத நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்: அமைச்சர் சாமிநாதன் எச்சரிக்கை
தமிழகத்தில் தமிழில் பெயர்ப்பலகை இல்லாத நிறுவனங்களுக்கு மே மாதம் முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.;
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன், "தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகளில் பெயர் பலகை வைக்கும் போது தமிழில் வைக்க வேண்டும். தமிழில் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்களுக்கு மே மாதம் முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்தார்.