தொடர் மழை.. மேம்பாலத்தை கார் பார்க்கிங்காக மாற்றும் சென்னை மக்கள்.!
சென்னையில் இன்றும் கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.;
சென்னை,
டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுடைந்தாலும், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழையை கொடுத்து வருகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சென்னை - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும் இதனால் வட மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நேற்று முதல் பெய்து வரும் மழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வரும் நிலையில், மழையால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்துவிடும் என அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், தண்ணீர் தேங்கும் என்ற அச்சத்தால் மக்கள் தங்களது கார்களை மேம்பாலத்தில் நிறுத்தி வருகின்றனர். இதனால் வேளச்சேரி, ராயபுரம் மற்றும் கோடம்பாக்கம் மேம்பாலங்களில் கார்கள் வரிசைகட்டி நின்றுகொண்டிருக்கிறது.