சென்னை உள்பட 5 மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை கனமழை எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.;
சென்னை,
வங்க கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையை கடுமையாக பாதிப்பில் ஆழ்த்தியது. 330-க்கும் கூடுதலானோர் பலியாகி விட்டனர். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், சென்னையில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் ஒரே இடத்தில், பல மணி நேரமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னை உள்பட 5 மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.