இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 02-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-12-02 09:00 IST


Live Updates
2025-12-02 13:12 GMT

ரயில்களில் கற்பூரம கொளுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அய்யப்ப பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே கோட்டம் அறிவுறுத்தியுள்ளது. மீறினால் ரயில்வே சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

2025-12-02 12:26 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கொடுகூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (30), வாழப்பாடி அருகே உள்ள பேளூரில் வீடு எடுத்து தங்கி இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளார். நவீன ஸ்கேன் கருவி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2025-12-02 12:24 GMT

கணுக்கால் வீக்கம், வலதுகை சிராய்ப்பு ஏற்பட்டதால் டிரம்ப் உடல்நிலை குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், அவரின் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டை வெளியிட்டு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், திடகாத்திரமான மனநிலையில் உள்ளதாகவும் வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

2025-12-02 12:20 GMT

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நாளை மலையேற தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

2025-12-02 12:19 GMT
  • பிரதமர் அலுவலகம் - பெயர் மாற்றம்
  • புதிதாக அமைக்கப்படும் பிரதமர் அலுவலகத்திற்கு ’சேவை இல்லம்’ என பெயர் மாற்றம்
  • மத்திய செயலகம் கர்த்தவ்ய பவன் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், பிரதமர் அலுவலக பெயர் மாற்றம்
2025-12-02 11:56 GMT

இந்தியாவில் மோசடி செய்து வெளிநாடு தப்பி ஓடிய 15 தொழிலதிபர்களால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவிப்பு.

விஜய் மல்லையா, நீரவ் மோடி, நிதின் ஜே சந்தேசரா, சேத்தன் ஜே சந்தேசரா, திப்தி சி சந்தேசரா, சுதர்சன் வெங்கட்ராமன், ராமானுஜம் சேஷரத்தினம் உள்ளிட்ட 15 பேர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது

2025-12-02 10:58 GMT

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. கைலாசகிரி மலை உச்சியில் கடல் மட்டத்தில் இருந்து 1,000 அடி உயரத்தில் 55 மீட்டர் நீளத்தில் கேண்டிலிவர் பாலமாக இது கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நடக்க 15 நிமிடங்களுக்கு ரூ.300 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது 

2025-12-02 10:54 GMT

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜயின் சாலை வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டிச.5ம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரம் அறிவித்துள்ளார். முதல்-மந்திரி ரங்கசாமியை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் சந்தித்து அனுமதி கோரிய நிலையில் மறுக்கப்பட்டுள்ளது.

2025-12-02 10:43 GMT

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்