திருச்சி - துபாய் விமானம் புறப்படுவதில் தாமதம் - பயணிகள் வாக்குவாதம்

விமானம் புறப்படும் நேரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-04-04 13:15 IST

திருச்சி.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், , துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவிலான விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை 4 மணி அளவில் துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் இந்த விமானத்தில் 113 பயணிகள் அமரவைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து விமானம் ரன்வேயில் சற்று தூரம் சென்ற நிலையில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் தொழில் நுட்ப கோளாறுகளை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விமானத்தில் இருந்த 113 பயணிகள் இறக்கி விடப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு குடிநீர் மற்றும் உணவுகளை விமான நிலையத்தினர் வழங்கினர்.

விமானம் புறப்படும் நேரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பயணிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்