ஜி.எஸ்.டி குறைப்பு: தாமதமான நடவடிக்கை; ஆனாலும் வரவேற்கிறேன் - ப.சிதம்பரம்
ஜிஎஸ்டி அமலானபோதே நானும் பொருளாதார நிபுணர்களும் எச்சரித்தோம் என்று ப.சிதம்பரம் கூறினார்.;
மதுரை,
56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஜிஎஸ்டி வரியை எளிமையாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் நிர்மலா சீதாராமன், திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதங்களை அறிவித்தார்.
பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டு, ஜிஎஸ்டி வரியை 2 அடுக்குகளாக குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், மதுரை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-ஜிஎஸ்டி அமலானபோதே நானும் பொருளாதார நிபுணர்களும் எச்சரித்தோம். மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பு தாமதமான நடவடிக்கை, இருந்தாலும் வரவேற்கிறேன் என்றார்.