வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்
பாளையங்கோட்டை, கோட்டூர் பகுதியில் ஒரு நபர், ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.;
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டூர் பகுதியைச் சேர்ந்த முஸ்தபா மகன் கலீல் ரகுமான் (வயது 50) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அவர் அந்த பெண்ணை ஆபாசமான வார்த்தைகளால் பேசியதோடு, அப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.