‘எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் நாற்காலி என்பது கேள்விக்குறிதான்’ - வைகோ

த.வெ.க.வின் தாக்கம் என்ன என்பது தேர்தலுக்கு பிறகே தெரியும் என வைகோ தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-23 17:46 IST

சென்னை,

சென்னையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“சூரியன் எப்போதும் மறையாது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளதால் அ.தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் நாற்காலி என்பது கேள்விக்குறிதான்.

உள்துறை அமைச்சர் கூட திராவிட இயக்கம் இருக்காது என பேசுகிறார், இது வரம்பு மீறல். விஜய் தலைமையிலான த.வெ.க.வின் தாக்கம் என்ன என்பது தேர்தலுக்கு பிறகே தெரியும். அப்போது பார்க்கலாம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்