அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்; பிரதமர் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி சூளுரை
வரும் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.;
சென்னை,
சென்னை மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பிரதமர் மோடி இந்த மண்ணில் கால் வைத்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. சூரியன் மறைந்து குளிர்ச்சி நிலவுவதே சட்டமன்ற தேர்தலுக்கான வெற்றி சான்று. தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். வரும் தேர்தலில் 210 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.
தேர்தலில் நமது வெற்றிக்கு மக்கள் துணை நிற்பார்கள்; கூட்டணி கட்சியினர் எழுச்சியோடு உள்ளனர். அதிமுக ஆட்சியில் கேட்ட திட்டங்களை வழங்கியது மத்திய அரசு.
தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் ஆட்சியில் அமர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சி தேவையா? திமுக ஆட்சி கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான்; வரும் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும்; இதுதான் திமுகவுக்கு இறுதித்தேர்தல். உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்.. பை.. பை.. ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறினார்.