தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்

அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.;

Update:2025-10-07 10:36 IST

சென்னை,

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி அண்மைக்காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அம்சவேணி இன்று காலை காலமானார். அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதாவுக்கும், சுதீஷுக்கும் இந்த தகவல் தெரியவந்ததும் அவர்கள் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு திரும்ப உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்