நிலத்தகராறில் தி.மு.க. நிர்வாகி சுட்டுக்கொலை - போலீஸ் விசாரணை
கொலை சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;
சேலம்,
சேலம் கருமந்துறை பகுதியை சேர்ந்தவர் தி.மு.க. கிளைச் செயலாளரும், விவசாயியுமான ராஜேந்திரன். இவர் தனது விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் அவரை நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், உயிரிழந்த ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக இந்த கொலை நடத்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.