விளம்பர மோகம் தலைக்கேறிய திமுக அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

திமுக எனும் நாடகக் கம்பெனியின் நடிப்பு எல்லை கடந்து நம்மை எரிச்சலூட்டுகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-26 15:25 IST

சென்னை ,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ரோம் நகரம் பற்றி எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக, அழுகிப்போன முட்டைகள், புழு பூச்சி நெளியும் குடிநீர், பல்லி விழுந்த உணவு என நாளுக்கு நாள் பிள்ளைகளுக்கு சாவு பயத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் அரசின் சத்துணவுத் திட்டத்தினைப் புகழ்ந்து மேடையில் சாம்பாருக்கு சர்டிபிகேட் வழங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசின் மடத்தனத்தை என்னவென்று சொல்வது? ஆளும் அரசின் சத்துணவுத் திட்டத்தைக் கண்டு அதிசயிக்கும் திமுக தலைவர்களும், பிரமுகர்களும் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பார்களா? அல்லது அரசுப் பள்ளிகளில் வழங்கும் சத்துணவை ஒருவேளைக்காவது உண்பார்களா? திமுக எனும் நாடகக் கம்பெனியின் நடிப்பு எல்லை கடந்து நம்மை எரிச்சலூட்டுகிறது.

தேர்தல் சமயத்தில் வண்ண விளம்பரங்களையும், திரைத்துறைப் பிரபலங்களையும் நிறைத்து பிரம்மாண்டமாக ஒரு விழா எடுத்தால் மக்கள் தங்களின் நிர்வாகத் தோல்விகளை மறந்துவிடுவார்கள் என நினைத்துக் கொண்டு, மக்களின் வரிப்பணத்தை வெட்டியாக வாரி இறைத்துக் கொண்டிருக்கும் திமுக அரசின் அட்டூழியங்கள் ஆபத்தானவை. “திராவிட மாடல்” எனும் ஒரு போலி பிம்பத்திற்குள் அடைத்து தமிழகத்தை அழிவினை நோக்கி இழுக்க முயலும் திமுக அரசின் அத்தனை சதித்திட்டங்களும் வரும் சட்டமன்றத் தேர்தலில் முறியடிக்கப்படும். என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்