தி.மு.க. உறுப்பினர் சாலை விபத்தில் இறந்தால்.. ரூ.10 லட்சம் நிவாரண நிதி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தொண்டர்களின் நம்பிக்கைதான் நம்முடைய முதல் பலம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.;

Update:2025-06-01 16:02 IST


தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தொண்டர்களின்நம்பிக்கைதான் நம்முடைய முதல் பலம். என் இயக்கம் - என் கட்சி - என் தலைமை என்ற எண்ணம் கொண்டவர்கள் நம்முடையதொண்டர்கள். "நானும் - என் குடும்பமும் கழகத்துக்காக இருக்கிறோம். கழகம் எனக்கும், என் குடும்பத்துக்கும் பாதுகாப்பாக இருக்கிறது" என்ற எண்ணம்தான், இந்த இயக்கம் 75 ஆண்டுகளாக நிலைத்திருக்க அடிப்படை காரணம்

இளைஞர்களுக்கு வாய்ப்பைக் கொடுங்கள். எந்தளவுக்கு இளைஞர்களுக்கு இடம் கொடுக்கிறீர்களோ, அந்தளவுக்கு கழகத்தில் புது ரத்தம் பாயும். செயல்பாடுகள் வேகமாக இருக்கும். வெற்றி உறுதி செய்யப்படும்.

கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்