‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' திமுக பரப்புரை நாளை தொடக்கம்

சென்னை தேனாம்பேட்டையில் நாளை நடைபெறும் திமுகவினரின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.;

Update:2025-12-09 16:02 IST

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என தெரிகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.

இந்தநிலையில் திமுகவினரின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நாளை தொடங்க உள்ளது. தேனாம்பேட்டையில் பகுதிச்செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் திமுகவின் பிரசாரம் மாநிலம் முழுவதும் நாளை தொடங்க உள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவினரை உற்சாகத்துடன் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக செல்லும் பூத் கமிட்டி குழுக்களில் மகளிர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்