திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்க தடை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-26 07:19 IST

திருச்சி,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்றும் (திங்கட்கிழமை), 28-ந்தேதியும் திருச்சி மாவட்டத்திற்கு வருகிறார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த 2 நாட்களும் நள்ளிரவு 12 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதித்து திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் உத்தரவிட்டு உள்ளார்.

தடையை மீறி டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்