மதுரை: 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2026-01-26 08:52 IST

மதுரை,

மதுரை மாநகர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (வயது 29). மாநகரை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்தநிலையில், பெற்றோர் எதிர்ப்பை மீறி சில மாதங்களுக்கு முன்பு, அந்த சிறுமியை திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே, அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தனர்.

அதில், சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர் பத்மா அளித்த புகாரின் பேரில், மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வெற்றிச்செல்வத்தை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்