திருமணமான 3-வது நாளில் பணம், நகையுடன் புதுப்பெண் ஓட்டம் - கணவர் போலீசில் புகார்
பாஸ்கர் ஆதரவற்ற இளம்பெண் ஒருவரை 4 கிராம் தங்கதாலியை கட்டி திருமணம் செய்து கொண்டார்.;
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (35 வயது). பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் சாத்தான்குளத்தை சேர்ந்த திருமண புரோக்கர் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த ஆதரவற்ற இளம்பெண் என்று கூறி பெண் ஒருவரை கடந்த 20-ந்தேதி திருச்செந்தூர் துர்க்கை அம்மன் கோவில் முன்பு 4 கிராம் தங்கதாலியை கட்டி திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 22-ந்தேதி பாஸ்கர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் புதிதாக வாங்கிய துணிகளையும் காணவில்லை. அப்போதுதான் மனைவி கட்டிய தாலி, வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் துணிகளுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.