திடீர் வெள்ளப்பெருக்கு: மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு அதிக அளவு மழை பெய்தது.;

Update:2026-01-26 08:56 IST

நெல்லை,

குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை கீழடுக்கு வளிமண்டல காற்றலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதற்கிடையில், தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு அதிக அளவு மழை பெய்ததால் மணிமுத்தாறு அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். எனினும் அருவியைப் பார்வையிட சுற்றுலா பணிகளை அனுமதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்