தஞ்சையில் இன்று திமுக மகளிரணி மாநாடு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்...!
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.;
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன
இந்நிலையில், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று டெல்டா மண்டல திமுக மகளிரணி மாநாடு நடைபெற உள்ளது. திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பங்கேற்பார்கள் என்று திமுக தெரிவித்துள்ளது.
திமுக மகளிரணி மாநாட்டில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை வர உள்ளதால் பாதுகாப்புப்பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தஞ்சையில் இன்று காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.