துபாய்-மதுரை ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்படும் நேரம் இன்று முதல் மாற்றம்

துபாய்-மதுரை இடையே செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்படும் நேரம் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update:2026-01-05 02:14 IST

கோப்புப்படம்

துபாய்,

துபாயில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. இதன் காரணமாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த விமான சேவை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையத்தை காலை 11.40 மணிக்கு சென்றடைவது வழக்கம் ஆகும். இந்த விமான சேவை இன்று (திங்கட்கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘துபாயில் இருந்து அதிகாலை 1.55 மணிக்கு புறப்படுகின்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் மதுரையை காலை 7.40 மணிக்கு சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து காலை 8.50 மணிக்கு புறப்பட்டு துபாயை காலை 11.25 மணிக்கு வந்தடையும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்