காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: நடுக்கடலில் பாதுகாப்பு, மீட்புப் பணி ஒத்திகை

ஹெலிகாப்டர், டோர்னியர் விமானம் மூலம் மீட்புப் பணிகளை தத்ரூபமாக ராணுவ வீரர்கள் ஒத்திகை செய்து வருகின்றனர்.;

Update:2025-04-24 15:50 IST

காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக இந்திய விமானப்படை வீரர்கள் தமிழகத்தின் பல இடங்களில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று நாகையிலிருந்து இலங்கை செல்லும் பயணிகள் படகு விபத்திற்குள்ளானது போல் ஒத்திகை செய்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஹெலிகாப்டர், டோர்னியர் விமானம் மூலம் மீட்புப் பணிகளை தத்ரூபமாக இந்திய ராணுவ வீரர்கள் ஒத்திகை பார்த்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்