நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி 17¾ கோடியாக அதிகரிப்பு
முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 8 கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) முட்டை ஏற்றுமதி 17 கோடியே 90 லட்சமாக அதிகரித்து உள்ளது. ஆகஸ்டு மாதத்தை ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் 1 கோடியே 23 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.