நாமக்கல்லில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு

முட்டைக்கோழி, கறிக்கோழி விலைகளில் மாற்றம் இல்லை;

Update:2025-04-28 08:47 IST

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 410 காசுகளாக இருந்து வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக அதிகரித்து உள்ளது.

முட்டைக்கோழி கிலோ ரூ.85-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.88-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்