சென்னையில் 4-ந்தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் கே.கே.நகர் கோட்டங்களில் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மையம், மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய மின் பகிர்மான வட்டங்களின் மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.