பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அரசின் மீது நம்பிக்கை: ஈபிஎஸ், அண்ணாமலையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ; அமைச்சர் ரகுபதி
அ.தி.மு.க.ஆட்சியைபோல இல்லாமல் இந்த ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கையால்தான் பெண்கள் தைரியமாக புகார் தருகின்றனர் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.;
புதுக்கோட்டை,
பாலியல் வன்கொடுமைகள் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் கூறியதாவது:-
ஆட்சியின் மீதுள்ள நம்பிக்கையால்தான் பாலியல் சீண்டல் விவகாரத்தில் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். மாணவிகள் புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். யாரோ தூண்டுதலின் பேரில் மாணவர்கள் உதவி தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி உள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அரசின் மீதுள்ள நம்பிக்கையை ஈபிஎஸ், அண்ணாமலையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில், குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட்டுள்ளது.
குற்றங்கள் நடந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும். குற்றவாளிகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோமா என்பது தான் முக்கியம். அதனை இந்த அரசு துரிதமாக எடுத்து இருக்கிறது. பெண்களுக்கு தி.மு.க., அரசு பாதுகாப்பை தருகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை. ஈ.பி.எஸ்.,க்கு அவதூறு பரப்புவதே வழக்கமாகிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.