இறந்த பிறகும் உனக்கு இறப்பில்லை உயிர்ப்பே!- கவிஞர் வைரமுத்து பதிவு
கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் கலைஞர் நினைவு நாளையொட்டி கவிதை வடிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.;
சென்னை,
தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுநாள் இன்று (ஆக.7) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தரப்பினர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் கலைஞர் நினைவு நாளையொட்டி கவிதை வடிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வைரமுத்து பதிவிட்டு இருப்பதாவது:
"புகழப்படுவதற்கோ
இகழப்படுவதற்கோ
உயிர்ப்போடு திகழவேண்டும்
ஒரு பொருள்
இறந்த பிறகும்
நீ புகழப்படுகிறாய்
மற்றும்
இகழப்படுகிறாய்
என்ன பொருள்?
உன்னதப் பொருளாக
இன்னும் நீ
உயிர்ப்போடு திகழ்கிறாய்
என்று பொருள்
இரு இப்படியே
இறந்த பிறகும்
உனக்கு
இறப்பில்லை உயிர்ப்பே!"
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.