கோவையில் லாரி மோதி பெண் காவல் ஆய்வாளர் உயிரிழப்பு
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பானுமதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
கோவை,
கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பானுமதி(வயது 52). இவர் இன்று அதிகாலை 5 மணியளவில் சிங்காநல்லூர் அருகே உள்ள காமராஜர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக அரிசி மூட்டை ஏற்றி வந்த லாரி மோதி படுகாயம் அடைந்த பானுமதி, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பானுமதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.