வாணியம்பாடியில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

மூன்று மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.;

Update:2025-09-07 07:42 IST

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் நாற்காலி, கதவுகள் உள்பட மர பொருட்கள் தயாரிக்கும் குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த குடோனில் மர பொருட்கள் தயாரிப்பதற்காக தேக்கு மரக்கட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இன்று அதிகாலையில் திடீரென மர குடோனில் தீ ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே தீ மளமளவென பரவியது. இதனைக்கண்டவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்புத்தூறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மூன்று மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதனிடையே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரங்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்