நீலகிரியில் டிரோன் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டிய வனத்துறை
காட்டு யானைகள் உலா வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.;
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கிராமங்களுக்குள் அவ்வப்போது காட்டு யானைகள் புகுந்து விளைநிலங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், கூடலூர் அருகே குனில் வயல், எச்சம் வயல் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உலா வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற வனத்துறையினர் ஒலியெழுப்பி விரட்டும் அதிநவீன தெர்மல் டிரோன்கள் உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர்.