வாக்காளர் பட்டியலில் குளறுபடி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
இந்திய தேர்தல் கமிஷனின் அறிவுறுத்தலின்படி, 1,200 பேரை வாக்காளர்களாக கொண்ட 1,372 வாக்குச்சாவடிகளை பிரித்துள்ளனர்;
சென்னை,
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட கூட்டரங்கில் நேற்று, வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பின்னர். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,
இந்திய தேர்தல் கமிஷனின் அறிவுறுத்தலின்படி, 1,200 பேரை வாக்காளர்களாக கொண்ட 1,372 வாக்குச்சாவடிகளை பிரித்துள்ளனர். இதன் மூலம் ஒரே குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு தனித்தனியாக வாக்களிக்கும்படி பிரித்துள்ளார்கள். இதனால் 2 கிலோ மீட்டர் வரை பயணித்து பலரும் வாக்களிக்கும் நிலை ஏற்படும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்காளர் மறுசீரமைப்புக்கு முன்பாக தொகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு இடையேயான தூரத்தை அரசியல் கட்சியினர் அறியும் வகையில் விவரங்களை தெரிவிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
குளறுபடி இல்லாமல் வாக்காளர்கள் பட்டியலை தயாரித்து அதை வெளிப்படைத் தன்மையுடன் பொதுமக்கள் மத்தியில் வெளியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். இதை சரி செய்யவில்லை என்றால் கோர்ட்டுக்கு செல்வதை தவிர வேறு வழி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.