காதலி பிரிந்து சென்றதால் விரக்தி: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தஞ்சாவூரில் காதலி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2025-07-16 05:44 IST

கோப்புப்படம் 

தஞ்சை கீழவாசல் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மகன் சதீஷ்குமார் (25 வயது). இவர், கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் சதீஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மலர்ந்தது. இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சதீஷ்குமாருக்கும், அவர் காதலித்து வந்த பெண்ணிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இதனால் சதீஷ்குமார் விரக்தியடைந்த நிலையிலேயே காணப்பட்டார். மகன் விரக்தியில் இருந்து வந்ததால் சதீஷ்குமாரின் குடும்பத்தினர் கும்பகோணத்தில் வசித்து வந்த வீட்டை கடந்த ஓராண்டுக்கு முன்பு காலி செய்துவிட்டு தற்போது தஞ்சை கீழவாசல் சுண்ணாம்புகார தெருவில் வசித்து வருகின்றனர். இருப்பினும் கடந்த சில நாட்களாக சதீஷ்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை யாரும் இல்லாத நேரத்தில் சதீஷ்குமார் வீட்டின் உத்திரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்