கோடம்பாக்கத்தில் குப்பை கழிவுகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி விளக்கம்
எம்.ஜி.ஆர். கால்வாயில் உள்ள குப்பைக் கழிவுகள் மாநகராட்சிப் பணியாளர்களால் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (22.08.2025) அதிகாலை பெய்த மழையினைத் தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலம் கே.கே. சாலைப் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். கால்வாயில் வரும் நீரோட்டத்தில் குப்பை கழிவுகள் அதிகமாகி, அதன் காரணமாக அருகில் உள்ள பச்சையப்பன் தெருவில் தண்ணீர் வந்ததாக காலை 7 மணி அளவில் அப்பகுதி மக்களிடமிருந்து புகார்கள் வந்தன.
அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். கால்வாயில் உள்ள குப்பைக் கழிவுகள் மாநகராட்சிப் பணியாளர்களால் காலை 11 மணிக்குள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. இதன் காரணமாக பச்சையப்பன் தெருவில் உள்ள தண்ணீர் வடிந்து உரிய தீர்வு காணப்பட்டது. இக்கால்வாயில் தொடர்ந்து மழை காரணமாக அடித்து வரப்படும் குப்பைக் கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.