பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: ஜி.கே.வாசன் வரவேற்பு

மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தமானது மக்களின் மாதாந்திர வருமானத்தில் சேமிப்புக்கு பேருதவியாக இருக்கும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்;

Update:2025-09-04 13:52 IST

சென்னை,

தமாகா தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

நாடு முழுவதற்குமான புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை வரவேற்கத்தக்கது.நேற்று 03.09.2025 புதன்கிழமை, புது டெல்லியில் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அவர்கள் புதிய ஜிஎஸ்டி க்கு ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

ஜிஎஸ்டி விகிதம் 5, 12, 18, 28 என்று நான்கு அடுக்காக இருந்த நிலையில் தற்போது 5, 18 ஆகிய 2 அடுக்குகளை கொண்ட புதிய ஜிஎஸ்டி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது. மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் 5%, 18% மற்றும் 40% என மூன்றாக சீர்திருத்தம் செய்திருப்பது பாராட்டுக்குரியது.

வேளாண் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி, வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் 5 சதவீத வரி அடுக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஜிஎஸ்டி வரி முறையால் நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பாத்திரங்கள், குழந்தைகளுக்கான உணவு பாட்டில்கள், நெய் பால் பொருட்கள் மற்றும் தையல்பொருட்கள் போன்றவற்றின் விலை குறையும். தனி நபர் காப்பீடுகளுக்கு இனி ஜிஎஸ்டி கிடையாது.

உடல் நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடிய புகையிலைப் பொருட்கள் மற்றும் ஆடம்பரமான பொருட்களுக்கு 40 சதவீத வரி விதிப்பதால் உடலுக்கு கேடு தரக்கூடிய பொருட்களை வாங்குவது குறையும், ஆடம்பர பொருட்களை வாங்கக்கூடிய நபர்கள் அதிக வரியை செலுத்தி வாங்கினால் அரசுக்கு அதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தமானது சாதாரண மக்களின் மாதாந்திர வருமானத்தில் சேமிப்புக்கு பேருதவியாக இருக்கும். பொதுவாக விவசாயம், உணவுப்பொருட்கள், நோட்டுகள், பயிற்சி புத்தகங்கள், மருந்துகள், காலணிகள், சிறிய வகையிலான கார்கள், இரு சக்கர வாகனங்கள், மின்னணுப் பொருட்கள் என பலவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் அனைத்துத் துறைகளும் வளர்ச்சி அடையும். மேலும் அனைத்து தரப்பு மக்களும் பயனடைவார்கள்.

பொது மக்கள் பயன் பெறும் வகையில், நாட்டின் பொருளாதாரம் மேம்படும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஜிஎஸ்டி வரி விகித சீர்திருத்தத்தை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) வரவேற்கிறேன்.

மக்கள் நலன், மாநில வளர்ச்சி, நாட்டின் பொருளாதார உயர்வு ஆகியவற்றிற்கு ஏதுவாக புதிய ஜிஎஸ்டி யை நாட்டிற்கு அளித்திருக்கும் மத்திய நிதி அமைச்சருக்கும், மத்திய அரசுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்