துபாயில் கணவர்... வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update:2025-03-25 12:54 IST

கடலூர்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 29 வயதுடைய இளம்பெண். இவரது கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். வீட்டில் இளம்பெண் தனியாக இருந்தபோது, கம்மாபுரம் அடுத்த கோ.மாவிடந்தல் கிராமத்தை சேர்ந்த செல்வராசு மகன் சிவக்குமார் என்பவர் மதுபோதையில் அங்கு வந்தார்.

அவர் திடீரென தான் வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அதை சிவக்குமார் வீடியோவாக எடுத்துக் கொண்டார். பின்னர் வீடியோவை காட்டி மிரட்டி, இளம்பெண்ணை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததாகவும் தெரிகிறது. மேலும் சிவக்குமார், அந்த வீடியோவை தனது நண்பரான வினோத்குமாருக்கு கொடுத்துள்ளார்.

இதையடுத்து வினோத்குமாரும் வீடியோவை வெளியில் விட்டு விடுவதாக மிரட்டி அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வந்தார். இதனிடையே சிவக்குமார், வினோத்குமார் இருவரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் ரொக்கமும், 3 பவுன் நகைகளும் வாங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் நகை, பணம் கொடுக்காவிட்டால் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டினர். இதைகேட்டு அதிர்ந்துபோன இந்த இளம்பெண், கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், வினோத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்