செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ தலைமையகம் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம், கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;

Update:2025-07-13 12:00 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ தலைமையகம் அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இதன்மூலம் செஞ்சி கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வருங்காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம், கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்