ஊர்ல எக்ஸிபிஷன் போட்டா கூட்டம் கூடத்தான் செய்யும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கொள்கையற்ற ஒரு கூட்டமும், பாசிச கட்சியும் தமிழகத்தை குறி வைக்கிறது என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.;
சென்னை,
திமுக 75 - அறிவுத் திருவிழா’ நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நம்முடைய இயக்கத்தை யார் வீழ்த்த நினைத்தாலும், உங்கள் திட்டம் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை உணர்த்துகிற இடம்தான் வள்ளுவர் கோட்டம். இது வெறும் வள்ளுவர் கோட்டம் அல்ல. கழகத்தின் வெற்றிக் கோட்டம்.. ஊர்ல தாஜ்மகால், ஐஃபிள் டவர் செட் போட்டு எக்ஸிபிஷன் போட்டா.. கூட்டம் கூடத்தான் செய்யும்.. ஆனால், அதெல்லாம் வெறும் அட்டை. எடப்பாடி பழனிசாமியை பார்த்தாலே ரெண்டே விஷயம்தான் நியாபகம் வரும். ஒன்னு கால்.. இன்னொன்னு கார்.
கொள்கையற்ற ஒரு கூட்டமும், பாசிச கட்சியும் தமிழகத்தை குறி வைக்கிறது. கொள்கை நம்மை வழிநடத்துகிறது. எடப்பாடி பழனிசாமியை பயம் வழி நடத்துகிறது. திமுக நடத்துவது அறிவுத்திருவிழா, அதிமுக நடத்தினால் அது அடிமைத்திருவிழா. திராவிடம் என கேட்டாலே பாஜக பாசிசம் பதறுகிறது. அனைத்து மாநிலங்களிலும் நிலைமை மாறுகிறது என்றார்.