அரசுத் தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்
அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 3.94 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களின் பலனாக நேற்று வரையிலும் அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 3,94,016 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளார்கள் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவரும் வருக! கல்வியின் வழியே அறிவுலகை ஆள்க!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.