ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை; சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது.;

Update:2025-08-06 17:13 IST

நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சுர்ஜித்தின் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் சரவணன் கைது செய்யப்பட்டார். அதன் பிறகே கவின் உடலை அவரது பெற்றோர் தகனம் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. இதற்காக நெல்லை நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்